• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

இன்று பிற்பகலில் இணைகிறது அதிமுக

Last Modified : 21 Aug, 2017 07:59 am

அதிமுகவின் இரு அணிகளான ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் இன்று பிற்பகலில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அவரது தலைமையில் இயங்கி வந்த அதிமுக கட்சி அணி அணியாக பிரிந்தது. இதன் காரணமாக தமிழக அரசியலே தலைகீழாக மாறிப்போனது. அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என கட்சி தொண்டர்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இதனிடையே முதலில் இரண்டு அணிகளாக பிரிந்த அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அணி என மூன்றாக பிரிந்தது. இது மக்கள் இடையேயும், கட்சி தொண்டர்கள் இடையேயும் மிகுந்த கலக்கத்தை உண்டு பண்ணியது. ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைவதற்கான பேச்சு வார்த்தை கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் 12 மணி அளவில் இரு அணிகளும் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இன்று மதியம் வரும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் ஒன்றாக இணைந்து அணி இணைப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுகின்றனர். அணி இணைப்பை தொடர்ந்து கட்சி மற்றும் ஆட்சியில் சில மாற்றங்கள் நடைபெறும் என தெரிகிறது. கட்சி தலைமையையும், துணை முதல்வர் பொறுப்பையும் ஓபிஎஸ் ஏற்றுக் கொள்வார் என தெரிகிறது. இதேபோல் அமைச்சரவையில் ஓபிஎஸ் அணியை சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ-க்கள் இடம் பெறுவார்கள். மேலும், கட்சியில் இருந்து சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் நீக்கப்படுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
[X] Close