அவசரமாக சென்னை திரும்புகிறார் தமிழக ஆளுநர்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இன்று பிற்பகல் சென்னை வருகிறார். மும்பையில் இன்று தான் கலந்து கொள்ள இருந்த நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு அவர் அவசரமாக சென்னை திரும்புகிறார். தமிழக அரசியலின் மிக முக்கிய திருப்பமாக கருதப்படும் அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு இன்று நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இன்று பிற்பகலில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. இந்நிலையில் மும்பை சென்றிருந்த தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அங்கிருந்து அவரசரமாக சென்னை திரும்புகிறார். மும்பையில் அனைத்து நிகழ்ச்சிகளையும் அவர் ரத்து செய்து விட்டு சென்னை திரும்புவதாக ஆளுநரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதிமுக இணைப்பு நடைபெற்றால் ஆட்சியில் மாற்றம் நடைபெறலாம் என்பதால் ஆளுநர் சென்னை வருவதாக கூறப்படுகிறது.

Advertisement:
[X] Close