• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றதற்கான ஆதாரம் வெளியீடு

Last Modified : 22 Aug, 2017 09:57 am

பெங்களூர் சிறையில் இருந்து சசிகலா வெளியே சென்றதற்கான ஆதாரமாக விளங்கும் வீடியோ காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு பல்வேறு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்திருப்பதாக கர்நாடக முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். மேலும் சிறைக்குள் சசிகலா சுதந்திரமாக உலாவும் வீடியோ காட்சியும் வெளியானது. மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கிய இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக முதல்வர் சித்தராமையா விசாரணை குழு ஒன்றை அமைத்தார். இந்த குழுவிடம் தான் கைப்பற்றிய ஆதாரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா சமர்பித்திருந்தார். அதில் இருந்த வீடியோ காட்சி ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் சசிகலா மற்றும் இளவரசி ஆகிய இருவரும் வெளியே சென்று விட்டு சிறைச்சாலைக்கு திரும்புவது, அவர்களுக்கு காவலர்கள் கதவுகளை திறந்துவிடுவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளன. சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் இந்த வீடியோ காட்சியானது அமைந்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவின் உட்பட 3 பேரின் மறுசீராய்வு மனு இந்த வாரம் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதன் தாக்கம் மறுசீராய்வு மனு மீதான விசாரணையின் போதும் வெளிப்படும் எனவும் தெரிகிறது.

Advertisement:
[X] Close