• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

தமிழக அமைச்சரவையில் மாற்றம்; புதிய அமைச்சர்கள் இன்று மாலை பதவியேற்பு

Last Modified : 21 Aug, 2017 10:15 am

அணி இணைப்பை தொடர்ந்து இன்று மாலையே புதிய தமிழக அமைச்சரவையானது பொறுப்பேற்க உள்ளது. அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வம் அணிகள் இன்று பிற்பகலில் இணைய உள்ளதாக முன்னர் செய்தி வெளியானது. இன்று பிற்பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் கட்சி இணைப்பு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியிடப்பட உள்ளது. அப்போது புதிய அமைச்சர்கள் நியமனம், இலாக்கா ஒதுக்கீடு போன்றவை குறித்தும் இறுதி முடிவு செய்யப்பட உள்ளது. பின்னர் 2 மணி அளவில் அதிமுகவினர் அனைவரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த உள்ளனர். அதனை தொடர்ந்து 3 மணி அளவில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். ஏற்கனவே விதித்த நிபந்தனை படி ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளது. அதன்படி துணை முதலமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சர் பொறுப்பு ஓபிஎஸ்-க்கு வழங்கப்படலாம் என தெரிகிறது. இதேபோல் கல்வி துறை அமைச்சராக மாஃபா பாண்டிய ராஜனும், அந்த பொறுப்பில் இருக்கும் செங்கோட்டையன் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. அணி இணைப்பை தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகம், தலைமை செயலகம் மற்றும் ஜெயலலிதா சமாதி ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement:
[X] Close