• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

பாஜக தலைவர் அமித்ஷாவின் தமிழக சுற்றுப்பயணம் ஒத்தி வைப்பு

Last Modified : 01 Jan, 1970 05:30 am

பாஜகவின் தேசிய தலைவரான அமித்ஷா இன்று தமிழகம் வர இருந்த நிலையில் தற்போது அந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 22,23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தமிழக பாஜக முன்னர் தெரிவித்திருந்தது. 22,23 ஆகிய தேதிகளில் சென்னையிலும், 24-ஆம் தேதி கோயம்பத்தூரிலும் அவர் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய அமைச்சரவை விரிவாக்கம் குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்ள உள்ளதால் அவரது தமிழக பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. அமித்ஷாவின் தமிழக பயணம் ஒத்தி வைப்பிற்கும், அணி இணைப்புக்கும் இடையே ஏதேனும் தொடர்பு இருக்குமா? எனும் கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதனிடையே 26-ஆம் தேதி அமித்ஷா தமிழகம் வரலாம் எனவும் கூறப்படுகிறது.

Advertisement:
[X] Close