• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

சசிகலா வீடியோ கிராஃபிக்ஸ் இல்லை - ஜெயானந்த்

Last Modified : 22 Aug, 2017 09:55 am

சிறையில் இருந்து சசிகலா வெளியே செல்வது போல் இணைத்தளத்தில் வெளியாகி உள்ள வீடியோ உண்மை தான் என திவாகரன் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார். சசிகலாவுக்கு பெங்களூர் சிறையில் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணைக் குழு தனது விசாரணையை நடத்தி வருகிறது. முன்னாள் சிறைத்துறை டிஐஜி ரூபா சமர்ப்பித்த வீடியோ ஆதாரங்களில் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் வெளியே சென்று விட்டு சிறைக்கு திரும்பும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த காட்சிகள் கிராஃபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டவை என கர்நாடக அதிமுக தலைவர் புகழேந்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வீடியோ காட்சிகள் கிராஃபிக்ஸ் செய்யப்பட்டவை இல்லை என்றும் அவை உண்மையான காட்சிகள் தான் என்றும் சசிகலாவின் சகோதரர் மகன் ஜெயானந்த் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ காட்சி பார்வையாளர்கள் அரங்கிற்கு சசிகலா வரும் போது பதிவு செய்யப்பட்டது. சசிகலா சிறையை விட்டு எங்கும் செல்லவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். சசிகலாவின் மறுசீராய்வு மனு மீதான விசாரணை நடைபெற உள்ள நிலையில், அதை சீர்குலைப்பதற்காக எதிரிகள் செய்யும் சதி இது எனவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close