• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

பொருள்களின் எடை குறைப்பைத் தடுக்க மதுரையில் புதிய திட்டம்

  jvp   | Last Modified : 21 Aug, 2017 07:37 pm

கடைகளில், சந்தைகளில் வாங்கும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட உணவு பொருள்களின் எடை குறைவாக உள்ளது என மதுரை மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாகப் புகார் எழுந்துவந்தது. அதையடுத்து மக்கள் மொபைல் 'ஆப்' மூலம் புகார் தெரிவிக்க வழிவகை செய்யப்பட்டது. எடை குறைப்பு செயல்படுகிறவர்களிடமிருந்து மெஷின்களையும் பறிமுதல் செய்து வந்தனர். இந்த நிலையில் தற்போது ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். அதாவது, பொருள்கள் வாங்கும் நுகர்வோர் தாங்கள் வாங்கும் பொருள்களினுடைய எடையினை அவரவர்களாகவே சரிபார்த்துக்கொள்ள பொது இடத்தில் ஒரு எடை இயந்திரத்தைக் கொண்டுவந்துள்ளனர். இதை மதுரை மாவட்ட கலெக்டர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த சேவை தமிழ்நாட்டில் மதுரையில்தான் முதல் முறையாகக் கொண்டுவரப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் தற்போது இயங்கும் இந்த இயந்திர சேவையானது, விரைவிலேயே மதுரையின் பல இடங்களில் மக்களுடைய பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட இருக்கின்றது.

Advertisement:
[X] Close