நாளை ஆளுநரை சந்திக்கிறது தினகரன் அணி

  shriram   | Last Modified : 21 Aug, 2017 09:48 pm

அதிமுகவின் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி அணிகள் இன்று இணைந்ததை தொடர்ந்து, தனது ஆதரவு உறுப்பினர்களை சந்திக்க டிடிவி தினகரன் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். அதன்பின், மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தியானம் செய்தனர். நாளை தாங்கள் அனைவரும் ஆளுநர் வித்யாசாகர் ராவ்-வை நேரில் சந்திக்கவுள்ளதாக தினகரன் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ தங்கத் தமிழ்ச்செல்வன் கூறினார். ஆட்சி நாளை கவிழும் எனவும் தினகரன் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement:
[X] Close