சென்னை தினம்... வரலாறு தெரிஞ்சிக்கோங்க!

Last Modified : 22 Aug, 2017 01:23 pm

பல எண்ணற்ற பெருமைகளை கொண்ட சென்னைக்கு இன்று 379-வது பிறந்த நாள். தென்னிந்தியாவின் நுழைவு வாயில் என்று அழைக்கப்படும் சென்னை தோற்றுவிக்கப்பட்டதாக கருதப்படும் கி.பி.1639ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22ஆம் தேதியை நினைவூட்டும் வகையில் சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் 1939ம் ஆண்டுதான் சென்னை தினம் கொண்டாடப்பட்டது. * பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஃபிரான்சிஸ் டே என்பவர், விஜயநகர பேரரசின் மன்னரான பெடா வெங்கடராயாவிடம், தங்கள் வர்த்தகத்துக்கு 3 சதுர மைல் அளவில் ஒரு இடத்தை சட்டப்படி உரிமையாக பெற்ற 1639ம் ஆண்டு ஆகஸ்ட் 22ம் தேதி பெற்றார். அந்த இடத்தில்தான் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. தற்போது, அங்குதான் தமிழக அரசின் சட்டப்பேரவை இயங்கிவருகிறது. * பிரான்சிஸ் டே தான் சென்னையில் நிறுவனராக கருதப்படுகிறார். அவர் வாங்கிய நிலத்தில், 1640 ஏப்ரல் 23ம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டத் தொடங்கினார். அங்கு ஆங்கிலேயர்கள் தங்க வீடும், பொருட்களைப் பாதுகாக்க கிடங்கும், சுற்றிலும் கோட்டையும் கட்டப்பட்டது. * 1639ல் இன்றைய ஜார்ஜ்கோட்டை, தலைமைச் செயலகம் உள்ள பகுதிகள் மட்டும்தான் சென்னையாக இருந்தது. திருவல்லிக்கேணி 1672ம் ஆண்டு சென்னையுடன் இணைக்கப்பட்டது. இதேபோல், திருவொற்றியூர் 1708ம் ஆண்டும், நுங்கம்பாக்கம் 1708ல்லும், எழும்பூர் 1720ம் ஆண்டும், மயிலாப்பூர் 1749ம் ஆண்டும் சென்னையுடன் இணைக்கப்பட்டன. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக சென்னை நகரம் விரிவடைந்து, இன்றைக்கு பெருநகராக வளர்ச்சியடைந்துள்ளது. * சென்னை சில காலம் பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்துள்ளது. 1749ம் ஆண்டு புனித ஜார்ஜ் கோட்டையை பிரான்ஸ் படைகள் கைப்பற்றின. அதே ஆண்டில் ஆங்கிலேயர்கள் படை சென்னையை மீண்டும் கைப்பற்றியது. * 18ம் நூற்றாண்டில் சென்னை, இங்கிலாந்தின் மிக முக்கிய கடற்படைத் தளமாக மாறியது. * சுதந்திரத்துக்கு முன்பு வரை இன்றைய தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரபிரதேசத்தின் பெரும்பகுதிகள் இணைந்து மெட்ராஸ் பிரசிடென்ஸி (சென்னை மாகாணம்) என்று அழைக்கப்பட்டன. * சுதந்திரத்துக்குப் பிறகு, மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டபோது, இந்த பகுதிகள் பிரிக்கப்பட்டன. அதன்பிறகு, மெட்ராஸ் ஸ்டேட் (சென்னை மாநிலம்) என்று அழைக்கப்பட்டது. * தி.மு.க முதன்முறையாக ஆட்சிக்கு வந்ததும், முதல்வரான அண்ணாதுரை மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயர் மாற்றப்பட்டு தமிழ்நாடு ஆனது. 1996ல் தி.மு.க ஆட்சியின்போது, முதல்வராக இருந்த கருணாநிதி, மெட்ராஸ் என்ற பெயரை தமிழ் மற்றும் ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் சென்னை என்றே அழைக்க வகை செய்யும் சட்டத்தை நிறைவேற்றினார். * முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004-ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.