• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

சசிகலா வீடியோ : பெங்களூரு சிறைத்துறை அதிகாரி மாற்றம்

Last Modified : 22 Aug, 2017 03:58 pm

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறையில் பல்வேறு சலுகைகள் அளிக்கப்படுவதாக முன்னாள் சிறைத்துறை அதிகாரி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். ஏற்கனவே சசிகலா சிறையில் இருந்து வெளியே செல்வது போல் ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. நேற்று ரூபா, சசிகலா குறித்த இரண்டாவது சிசிடிவி வீடியோவை ஊழல் எதிர்ப்பு விசாரணை ஆணையத்திடம் அளித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் இந்த வீடியோ வெளியானதை அடுத்து, பரப்பன அக்ரஹார சிறையின் தலைமை கண்காணிப்பாளராக இருந்த நிக்காம் பிரகாஷ் அம்பரீட் நேற்று நள்ளிரவில் மாற்றப்பட்டுள்ளார். கடந்த இரண்டு மாதத்தில் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் மாற்றப்படுவது இது ஆறாவது முறையாகும்.

Advertisement:
[X] Close