ஆதரவு வாபஸ்: டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர்

  shriram   | Last Modified : 22 Aug, 2017 11:18 am

நேற்று அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததை தொடர்ந்து, டிடிவி தினகரன் அணி அவசர கூட்டத்தை அழைத்து ஆளுநரை சந்திக்க உள்ளதாக கூறினர். இந்நிலையில், இன்று காலை ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க, டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ராஜ் பவனுக்கு படையெடுத்தனர். நேற்று வரை 18 எம்.எல்.ஏ.க்கள் இருந்த டிடிவி அணியில், இன்று விளாத்திகுளம் எம்.எல்.ஏ உமா மகேஸ்வரி சேர்ந்து, 19 பேராக சென்றுள்ளனர். தற்போது அனைவரும் ஆளுநரை சந்தித்து ஒரு கடிதத்தை அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்களது ஆதரவு கிடையாது என ஆளுநரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement:
[X] Close