• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

ஓபிஎஸ்க்கு கூடுதல் இலாக்காக்கள் : அறிவிப்பு வெளியீடு

Last Modified : 22 Aug, 2017 11:42 am

நேற்று துணை முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வத்திற்க்கு கூடுதல் இலாக்காக்கள் வழங்கப்பட்டுள்ளன. அதிமுக அணிகள் இணைந்ததையடுத்து, ஓபிஎஸ் துணை முதல்வராக நேற்று பதவியேற்றார். அதைத்தொடர்ந்து அமைச்சரவையும் மாற்றம் செய்யப்பட்டது. ஓபிஎஸ்க்கு நிதித்துறை, வீட்டுவசதித்துறை ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதல் இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது குறித்த அறிக்கை ஆளுநர் மாளிகையில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஜெயக்குமார் வகித்து வந்த துறைகளான திட்டமிடல், சட்டமன்றம், தேர்தல், பாஸ்போர்ட் ஆகியவை பன்னீர் செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெயக்குமார், தன்னிடம் மீதமுள்ள துறைகளான மீன்வளத்துறை, நிர்வாக சீர்திருத்தத்துறை ஆகியவற்றை கவனிப்பார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, தற்போது பன்னீர்செல்வத்திடம் துணை முதல்வர் பதவியுடன் 6 துறைகள் உள்ளன.

Advertisement:
[X] Close