• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

ஆஷ்ரம் பள்ளி விவகாரம் : சீலை அகற்ற உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

Last Modified : 22 Aug, 2017 12:28 pm

லதா ரஜினிகாந்துக்கு சொந்தமான ஆஷ்ரம் பள்ளி கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் கட்டிடத்தில் வாடகைக்கு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் மழலையர் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கற்பிக்கப்படுகிறது. இந்நிலையில், பள்ளி கட்டிடத்திற்கு லதா ரஜினிகாந்த் வாடகை கொடுக்கவில்லை எனக்கூறி, கட்டிடத்தின் உரிமையாளர் பள்ளிக்கு சீல் வைத்தார். இதைத்தொடர்ந்து, ஐஸ்வர்யா தனுஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் சார்பில், "சீல் வைத்ததால் பள்ளியின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் படிப்பை தொடர முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை உடனடியாக அகற்ற வேண்டும்" என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் இன்றைய விசாரணையில், மாணவர் நலன் கருதி பள்ளிக்கு வைக்கப்பட்ட சீலை உடனே அகற்ற வேண்டும் என கட்டிட உரிமையாளருக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Advertisement:
[X] Close