நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை

Last Modified : 01 Jan, 1970 05:30 am

தமிழக அமைச்சரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆளுநருக்கு ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். அதிமுகவின் இபிஎஸ்- ஓபிஎஸ் அணிகள் நேற்று இணைந்தது. இதைத்தொடர்ந்து இபிஎஸ் தலைமையிலான தமிழக அமைச்சரவைக்கு அளித்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் திரும்ப பெற்றுள்ளனர். வாபஸ் பெறுவதற்கான கடிதத்தை எம்எல்ஏக்கள் தனித்தனியாக ஆளுநரிடம் இன்று சமர்ப்பித்துள்ளனர். இது குறித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுகையில், "தமிழக அரசியலில் குழப்பம் நிகழ்வதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட வேண்டும். நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் திமுக பரிசீலித்து அதற்கான முடிவுகளை எடுக்கும்" என்று கூறினார். மேலும், "ஊழலை ஒழிப்பேன் என்று கூறிய மோடி, இரண்டு ஊழல் மிக்க அணிகளை ஒன்றாக இணைத்துள்ளார்" என குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement:
[X] Close