வைத்திலிங்கம் அதிமுக கட்சியில் இருந்து நீக்கம் : டிடிவி தினகரன் அறிவிப்பு

Last Modified : 01 Jan, 1970 05:30 am

அதிமுக கட்சியைச் சேர்ந்த வைத்திலிங்கம் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். நேற்று அதிமுக அணிகள் இணைந்த கூட்டத்தில், அமைச்சர் வைத்திலிங்கம், "பொதுக்குழு கூட்டப்பட்டு சசிகலா அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்படுவார்" என கூறியிருந்தார். இந்நிலையில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வைத்திலிங்கம் நீக்கப்படுவதாக தினகரன் இன்று அறிவித்துள்ளார். இது அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் ஒப்புதலோடு அறிவிக்கப்பட்டுள்ளது எனவும், கட்சியின் குறிக்கோள் மற்றும் கொள்கைக்கு எதிராக அவர் செயல்பட்டதால் நீக்கப்பட்டுள்ளார் எனவும் தினகரன் கூறியுள்ளார். இது குறித்து வைத்திலிங்கம் கூறுகையில், "ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தான் தினகரன், என்னை அதிமுக கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் தினகரனுக்கு இல்லை' என்றார்.

Advertisement:
[X] Close