நீட் தேர்வு அடைப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை - தமிழக அரசு

Last Modified : 22 Aug, 2017 03:44 pm

நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக அரசு தற்போது அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து இந்த அறிவிப்பை தமிழக சுகாதார துறை செயலர் ராதா கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். தமிழக அரசு கொண்டு வந்த நீட் தேர்வு விலக்கு அவசர சட்டத்திற்கு அனுமதி வழங்க முடியாது என மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. இதனை அடுத்து, நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என கூறி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் நாளை மறுநாள் நீட் தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை துவங்கும் என சுகாதார துறை செயலர் ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதற்கான தரவரிசை பட்டியலானது நாளை மதியம் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார். தமிழக அரசின் இந்த திடீர் அறிவிப்பால் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் மருத்துவ கனவு முற்றிலுமாக சிதைந்துள்ளது.

Advertisement:
[X] Close