நம்பிக்கையில்லா தீர்மானம் : சபாநாயகரை சந்திக்கும் தினகரன் அணியினர்

Last Modified : 22 Aug, 2017 03:51 pm

அதிமுகவின் இபிஎஸ்- ஓபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து, தமிழக அமைச்சரைவையில் நேற்று மாற்றம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவைக்கு அளித்த ஆதரவை தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். அதற்கான கடிதத்தையும் எம்எல்ஏக்கள் தனித்தனியாக ஆளுநரிடம் இன்று சமர்ப்பித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் இணைந்து சபாநாயகர் தனபாலை சந்தித்து, அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு கொண்டு வர உள்ளனர். சபாநாயகர் இதை ஏற்றுக்கொண்டால் தற்போதுள்ள அமைச்சரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும்படி தனபால் உத்தரவிடுவாரா? அமைச்சரவையில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து கேள்விக்குறியாகியுள்ளது.

Advertisement:
[X] Close