இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை மீட்க நடவடிக்கை

Last Modified : 01 Jan, 1970 05:30 am

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம், நாகப்பட்டிணம், புதுக்கோட்டை போன்ற பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் எல்லைத் தாண்டுவதாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்து வருகிறது. சமீபத்தில் இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்களில் 77 பேரை நல்லெண்ண அடிப்படையில் இலங்கை அரசு விடுதலை செய்தது. ஆனால் மீண்டும் 50-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டியதாக கூறி இலங்கை கடற்படை கைது செய்தது. இது தமிழக மீனவர்கள் இடையே மிகப்பெரிய அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், இலங்கை சிறையில் உள்ள 83 தமிழக மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இலங்கைக்கான இந்திய தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை அரசுக்கு தேவையான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

Advertisement:
[X] Close