• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

செப்டம்பர் 1 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

பொதுவாக வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்திற்கு பதிலாக அவற்றின் நகல்களை வைத்திருப்பது வழக்கம். இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர், மது அருந்திவிட்டு வாகனம் ஒட்டியது, அதிக பாரம் ஏற்றியது உள்ளிட்ட சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் 9,500 பேரின் ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலை விபத்துகளை குறைக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அனைவரும் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். தேசிய அளவில் தமிழகத்தில் தான் சிறந்த சாலைகள் உள்ளன. சிறந்த சாலைகள் இருப்பதால் அதிக வேகத்தில் பயணம் செய்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக பேட்டரியில் ஓடும் பேருந்துகள் சென்னையில் இயக்கப்படும். போக்குவரத்து துறையின் நடவடிக்கை மூலம் 3,240 விபத்துகள், 309 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன.

Advertisement:
[X] Close