• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

விஜயபாஸ்கர் பதவி விலக வேண்டும் ; ஸ்டாலின் வலியுறுத்தல்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களுக்கு துரோகம் இழைத்த அமைச்சர் விஜயபாஸ்கர் உடனடியாக பதவி விலக வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்ததால், தற்போது நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழக மாணவர்களுக்கு துரோகம் இழைத்து விட்டதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர், தமிழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இழைத்த அநீதியை அவர்கள் மறக்க மாட்டார்கள். நீட் தேர்வில் விலக்கு பெற முடியாத அமைச்சர் விஜயபாஸ்கர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். மாணவர்களுக்கு செய்த துரோகத்திற்காக அவர் அரசியல் துறவு மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அமைச்சர்கள் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். நீட் தேர்வு விலக்கு அவசர சட்டம் இயற்றப்பட்ட போது டெல்லியில் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என விஜயபாஸ்கர் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
[X] Close