உரிய நேரத்தில் சரியான முடிவை எடுப்போம் - கூட்டணி எம்.எல்.ஏ-க்கள் அறிக்கை

Last Modified : 01 Jan, 1970 05:30 am

நீண்ட இழுத்தடிப்புக்கு பின்னர் அதிமுகவின் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் நேற்று இணைந்தன. ஆட்சி பிரச்னை ஓரளவுக்கு முடிந்தது என்று இருந்த நிலையில், டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் அரசுக்கு எதிராக போர் கொடி தூக்கி உள்ளனர். அதிமுகவின் 135 எம்.எல்.ஏ-க்களில் 19 பேர் டிடிவி அணியில் உள்ளனர். இதனால் ஆட்சியில் இருக்கும் கூட்டணியில் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 116-ஆக உள்ளது. இது பெரும்பான்மை அளவை விட குறைவாகும். பெரும்பான்மையை நிரூபிக்க அரசுக்கு 117 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. இந்த நிலையில் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ-க்களான தமிமுன் அன்சாரி, தனியரசு மற்றும் கருணாஸ் ஆகியோர் யாருக்கு ஆதரவு அளிப்பார்கள் எனும் கேள்வி எழுந்தது. அதற்கு பதில் அளிக்கும் வகையில் எம்.எல்.ஏ-க்கள் 3 பேரும் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக ஆட்சி மாற்றத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், உரிய நேரத்தில் சரியான முடிவை எடுப்போம். தமிழக அரசு நிர்வாகத்தில் மத்திய அரசின் எல்லை தாண்டிய தலையீட்டால் தான் இவ்வளவு பிரச்னை என தெரிவித்துள்ளனர். முன்னதாக டிடிவி தினகரன் அதிமுகவில் அதிரடி நடவடிக்கைகள் எடுத்த போது அவருக்கு இவர்கள் மூவரும் ஆதரவு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
[X] Close