• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

சசியை சந்திக்க பெங்களூர் செல்கிறார் தினகரன்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

இழுபறியாக இருந்த ஓ பன்னீர் செல்வம் அணி, எடப்பாடி பழனிச்சாமி அணி என இரண்டாக பிரிந்திருந்த அதிமுக அணிகள் இரண்டும் தற்போது இணைந்துள்ளன. இது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக அமைப்பினரும் எதிர்மறை விமர்சனங்களை கூறிவரும் நிலையில், தினகரன் ஆதரவு 19 எம்.எல்.ஏக்கள் அதிமுக அணிகள் இணைப்பு எதிரொலியாக தமிழகப் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கடிதம் அளித்துள்ளனர். ஏற்கெனவே நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து வாக்களித்தோம். ஆனால், இப்போது அவர் தங்கள் நம்பிக்கையை இழந்துவிட்டார் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. அத்துடன் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புதுவை விண்ட் ப்ளவர் ரிசார்ட்டில் முகாமிட்டுள்ளனர். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிராக சபாநாயகரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் தரவும் திட்டமிட்டுள்ளனர்.இந்நிலையில் தினகரன் பெங்களூர் பயணம் செல்கிறார். பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்து தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து தினகரன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Advertisement:
[X] Close