• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய அஞ்சல் ஊழியர்கள்

Last Modified : 23 Aug, 2017 11:26 am

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்கத்தினர் கடந்த 16-ஆம் தேதி முதல் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அஞ்சல் ஊழியர்கள் விதவிதமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று இவர்கள் கையில் தட்டு ஏந்தி பிச்சை எடுப்பது போல் போராட்டம் நடத்தினர். நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட தலைமை அஞ்சல் நிலைய வளாகம் முன்பு இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர். ஊதியக்குழு மாற்றம், பணிச்சுமை குறைப்பு மற்றும் கமலேஷ் சந்திரா குழுவின் பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement:
[X] Close