• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

இணைந்தன அணிகள்; மீட்கப்படுமா இரட்டை இலை?

Last Modified : 23 Aug, 2017 10:53 am

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் 3-ஆக உடைந்த அதிமுக கட்சியில் தற்போது ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்து விட்டன. ஆர்.கே நகர் நகர் தேர்தலின் போது இரு அணிகள் இடையே கட்சி பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்துவதில் ஏற்பட்ட மோதலின் காரணமாக அவற்றை இந்திய தேர்தல் ஆணையம் முடக்கி வைத்தது. பெரும்பான்மை ஆதரவு கொண்ட அணிக்கு சின்னம் மற்றும் கட்சி பெயர் வழங்கப்படும் என கூறப்பட்டதை தொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் தேர்தல் ஆணையத்திடம் பிராமண பத்திரங்களை சமர்ப்பித்து வந்தன. ஆனால் முடிவு ஏதும் எட்டப்படாமல் இந்த விவகாரம் இழுத்தடித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று - முன் தினம் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்தன. அதனை தொடர்ந்து கட்சியை வழி நடத்த வழிகாட்டுதல் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அணி இணைப்பை தொடர்ந்து, விரைவில் இரட்டை இலை மற்றும் கட்சி பெயரை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அதிமுகவின் எதிரணியாக இருக்கும் டிடிவி தினகரன் அணியினர் இந்த விவகாரத்தில் எந்த மாதிரியான நிலைப்பாட்டை மேற்கொள்ள உள்ளனர் என்பது தெரியவில்லை.

Advertisement:
[X] Close