• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

மருத்துவ கலந்தாய்வு தரவரிசை பட்டியல் வெளியீடு

Last Modified : 23 Aug, 2017 11:32 am

நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சுகாதாரத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் இதனை வெளியிட்டார். இந்த பட்டியலில் ஓசூரை சேர்ந்த மாணவர் சந்தோஷ் முதலிடம் பிடித்துள்ளார். நீட் தேர்வில் சந்தோஷ் 656 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். இரண்டாம் இடத்தை பிடித்த கோவையைச் சேர்ந்த முகேஷ் கண்ணா 655 மதிப்பெண்களும், 3-ஆம் இடம் பிடித்த திருச்சியை சேர்ந்த சையத் ஹபீஸ் 651 மதிப்பெண்களும் நீட் தேர்வில் பெற்றுள்ளனர். மாநில பாடத்திட்டத்தில் படித்த 27,488 மாணவர்கள் கலந்தாய்வுக்காக விண்ணப்பித்திருந்தனர். இதே போல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படித்த 3,418 மாணவர்கள் மற்றும் கடந்த ஆண்டு பயின்ற மாணவர்கள் 5,636 பேரும் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இதில் சுமார் 27,712 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் நாளை முதல் கலந்தாய்வானது துவங்க உள்ளது. இது தொடர்பாக தொலைபேசி மூலம் மாணவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டு வருகிறது. கலந்தாய்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
[X] Close