காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு

Last Modified : 01 Jan, 1970 05:30 am

கர்நாடகாவின் மேகதாது எனும் இடத்தில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது மேகதாதுவில் தடுப்பணை கட்ட ஆட்சேபனை இல்லை என தமிழக அரசு தெரிவித்ததாக கூறப்பட்டது. இதனை அடுத்து தமிழக அரசுக்கு விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மேகதாதுவில் கர்நாடக தடுப்பணை கட்டுவதை அனுமதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்காமல் காவிரியில் தடுப்பணை கட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், இதனால் பல்வேறு குழப்பங்கள் உருவாகும் எனவும் அவர் கூறினார். இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகமும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

Advertisement:
[X] Close