• வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்
  • 5 மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • கூட்டத்தில் சிக்கிய ராகுல் : மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

தரவரிசை பட்டியலில் 50% சிபிஎஸ்சி மாணவர்கள் வந்தது எப்படி? நீதிபதி கேள்வி

Last Modified : 23 Aug, 2017 12:45 pm

நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருத்திகா என்ற மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி கிருபாகரன், "தரவரிசைப் பட்டியலில் 5% சிபிஎஸ்சி மாணவர்கள் இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், 50% சிபிஎஸ்சி மாணவர்கள் வந்தது எப்படி?" என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மருத்துவ மாணவர் சேர்க்கையில் உரிய நேரத்தில் முடிவெடுக்காமல் மாணவர்களுக்கு, தமிழக அரசு அநீதி இழைத்து விட்டது எனவும் அவர் கூறினார். இன்று வெளியிடப்பட்ட கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலில் சிபிஎஸ்சி மற்றும் தமிழ்நாடு பாடத்திட்ட மாணவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர்? அதில் யார் யாருக்கு எவ்வளவு இடம் கிடைக்கும்? என்ற விபரங்களை பிற்பகல் 2.15 மணிக்கு நடக்கும் அடுத்த விசாரணையில் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Advertisement:
[X] Close