இனி பிப்ரவரி 14ம் தேதி பெற்றோருக்கு பூஜை செய்யும் தினம்! ராஜஸ்தான் அரசு அதிரடி!!

  சாரா   | Last Modified : 13 Feb, 2020 07:59 pm

ராஜஸ்தானில் இனிவரும் காலங்களில் பிப்ரவரி 14ம் தேதி என்பது பெற்றோர்களுக்கு பூஜை செய்யும் தினமாக கொண்டாடப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

உலகமெங்கும் உள்ள காதலர்கள் தங்களின் காதலை வெளிப்படுத்த பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. கலாசார விதிமீறல் என பல இந்து அமைப்புகள் எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டம் நடத்துவதும், காதலர்களை துன்புறுத்துதலும் வழக்கம். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் பிப்ரவரி 14ம் தேதி கொண்டாடப்படும் காதலர் தினத்திற்கு பதில் அன்றைய தினத்தை பெற்றோருக்கு பூஜை செய்யும் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என  ராஜஸ்தான் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தத் தினத்தன்று பள்ளி மாணவர்களின் பெற்றோரை அழைத்து கலைநிகழ்ச்சி நடத்தி அவர்களுக்கு பூஜை செய்யவும், பிப்ரவரி 14ம் தேதியை பெற்றோருக்கு பூஜை செய்யும் தினம் என காலண்டரில் சேர்க்கவும் அம்மாநிலத்தில் அறிவிப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. 

காதலர் தினத்தைக் கண்டால் ஏன்தான் இவ்வளவு வெறுப்போ... காதல் என்பது இன்று நேற்று அல்ல... மனித இனம் தோன்றிய காலத்தில் இருந்தே இருக்கிறது. ராமாயணம், மகாபாரத காலத்தில் இண்டர்நெட், சேட்டிலைட், கூகுள் இருந்தது என்பவர்களுக்கு, உண்மையில் அந்தக் காலத்துக்கு முன்பு இருந்தே காதல் இருந்தது, காதலர்கள் இருந்தனர் என்பதை யார்தான் புரிய வைப்பார்களோ... என்னதான் சட்டங்கள் போட்டாலும், காதலையும் காதலர்களையும் ஒன்றும் செய்ய முடியாது என்பதே நிதர்சனம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close