காலாவை ஏன் காவிரியுடன் முடிச்சிபோடுகீறிர்கள்?- பிரகாஷ்ராஜ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 05 Jun, 2018 04:43 am

actor-prakshraj-says-what-s-film-kaala-got-to-do-with-kaveri-issue

காலா பிரச்னையை காவிரி பிரச்னையோடு முடிச்சிப்போடுவது ஏன் என காலாவிற்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் கொடுத்துள்ளார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் வுண்டர்பார் நிறுவனம் தயாரித்த படமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த காலா படத்தை கர்நாடகாவில் திரையிடமாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தெரிவித்துள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளதால் காலா படம் கர்நாடகாவில் திரையிடபோவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தது.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், காலாவுக்கும் காவிரிக்கும் என தொடர்பு இருக்கிறது. காவிரி நதிநீர் பிரச்னையில் இருமாநில அரசுகளும், மத்திய அரசு மற்றும் வல்லுநர் குழுவினருடன் இணைந்து பேசி நிரந்தர தீர்வு காணவேண்டும். அதைவிட்டுவிட்டு, பாஜக பத்மாவதி திரைப்படத்தை எதிர்த்தது போன்று காலாவை கர்நாடக திரைப்பட வர்த்தக சங்கம் எதிர்ப்பது ஏன்? பொழுதுபோக்காக எடுக்கப்படும் திரைப்படத்தை சமூக பிரச்னையுடன் அணுகுவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகாவில் ஆளும் மஜத- காங்கிரஸ் கூட்டணி அரசு இந்த பிரச்னைக்கு நல்ல தீர்வு காண வேண்டும். 'காலா' திரைப்படத்தை வெளிவராமல் தடுத்து என்ன செய்யபோகிறோம். இதனால் படத்தில் உழைத்த பல தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும். காலாவை நம்பிபோட்ட முதலீடும் நஷ்டத்தில் முடியும். காலா படத்திற்கு தடை விதிக்கவேண்டி சில அமைப்புகள் தான் குரல் எழுப்புகின்றனவே தவிர மக்கள் இல்லை” என தெரிவித்துள்ளார்.  

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close