ஸ்டெர்லைட்டை நிச்சயம் திறப்போம்: ஸ்டெர்லைட் அடாவடி!

  ஐஸ்வர்யா   | Last Modified : 06 Jun, 2018 08:48 pm

sterlite-plant-will-be-reopened-in-one-or-two-months-says-sterlite-chief-executive-ramnath

தூத்துக்குடியில் ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லை காப்பர் ஆலை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைப்பதாகவும், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் கூறி அம்மாவட்ட மக்கள் 100 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டன. போராட்டம் யுத்தகளமாகி 13 உயிர்களை காவு வாங்கியது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசாணை பிறப்பித்து ஆலைக்கு சீல் வைத்தது. 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை செயல் அதிகார் ராம்நாத், "தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் அமைதி திரும்ப காத்திருக்கிறோம். தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்திற்கு சமூக விரோதிகளும், தொண்டு நிறுவனங்களும்தான் காரணம்” என்றார்.

சர்வதேச நீதிமன்றம் சென்றால் கூட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது என்று தமிழக அமைச்சர்களும் முதலமைச்சரும் சொல்கிறனர். ஆனால், மிகவும் தைரியமாக ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்போம் என்று அந்நிறுவனம் கூறுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை என்பது வலுவானதாக இல்லை. நீதிமன்றத்தில் மிக எளிதில் தடை பெற்றுவிட முடியும் என்று வழக்கறிஞர்கள் சொல்லி வருகின்றனர். மேலும், ஆலை பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டிருந்தது. இந்த சூழலில்தான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

ஆலை நிர்வாகம் சில நாட்களில் உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளது. அப்படி மனு செய்தால், தமிழக அரசின் விளக்கத்தைப் பெறாமல் உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது என்று அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் மீறி, ஆலை நிர்வாகம் பேசி வருவது தூத்துக்குடியில் கொந்தளிப்பையே ஏற்படுத்தும். முன்னதாக 2013ம் ஆண்டு தமிழக அரசாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மீண்டும் ஆலையை திறந்தது குறிப்பிடதக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close