• திகார் சிறையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியதாக தமிழக காவல்துறை மீது வழக்கு
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • படித்த பெண்களை விட கிராமத்து பெண்களிடம் தைரியம் அதிகம்: கமல்ஹாசன்
  • சபரிமலை தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் கிடையாது: கேரள முதல்வர் மீண்டும் திட்டவட்டம்
  • பகத் சிங் பிறந்தநாளை கொண்டாடிய மாணவி சஸ்பெஸ்ட்!

நீட் தேர்வில் தோல்வி: மேலும் ஒரு மாணவி தற்கொலை

  Newstm News Desk   | Last Modified : 07 Jun, 2018 08:51 am

one-more-student-from-tn-kills-self-after-failing-in-neet

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். 

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தை சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

திருச்சி சமயபுரம் அடுத்த நம்பர்-1 டோல்கேட் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகள் சுபஸ்ரீ. ப்ளஸ்-2 தேர்வில் 907 மதிப்பெண்கள் எடுத்திருந்த இவர், மருத்துவ படிப்பில் சேர விரும்பி நீட் தேர்வு எழுதியிருந்தார். இந்நிலையில், கடந்த 4ந்தேதி வெளியான தேர்வு முடிவில் சுபஸ்ரீ 24 மதிபெண்கள் மட்டுமே பெற்றிருந்தார். 

தேர்விவல் தோல்வியடைந்ததால் மனமுடைந்த சுபஶ்ரீ, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார். அதனை கண்ட பெற்ளோர்கள் அவரை காப்பாற்றி அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவதால் மீண்டும் அதற்கெதிரான போராட்டங்கள் தமிழகத்தில் ஆங்காங்கே தொடங்கி உள்ளது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close