11ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களை டி.சி பெற வற்புறுத்தக்கூடாது!

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2018 08:02 am

if-students-failed-11th-student-school-management-won-t-push-to-get-their-tc

11ம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களை மாற்றுச்சான்றிதழ் பெற பள்ளிகள் வற்புறுத்தக்கூடாது என முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:  பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ள காரணத்தினால் பிளஸ் 1 வகுப்பு படிக்க அதே பள்ளியில் சேர்க்க தனியார் பள்ளிகள் மறுக்கக்கூடாது. அதே பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

அதேபோன்று தற்போது பிளஸ் 1, பிளஸ்  2 ஆகிய இரு தேர்வு மதிப்பெண்களும் கணக்கிடப்படுவதால், பிளஸ் 1 பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றாலோ, அல்லது சில பாடங்களில் தோல்வி அடைந்தாலோ அந்த மாணவர்களை மாற்றுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளுமாறு சில பள்ளிகள் கட்டயப்படுத்தியதாக தகவல் வெளியானது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பிளஸ் 1 வகுப்பில் தோல்வியுற்ற மாணவர்களை தொடர்ந்து பிளஸ் 2 வகுப்பில் பயில அனுமதித்து, அவர்களுக்கு ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி அளித்து தேர்வில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களையும் தோல்வி அடைந்த மாணவர்களையும் ஊக்குவித்து வெற்றி பெறச் செய்வதே பள்ளியின் முதன்மையான கடமை. கண்டிப்பாக மாற்றுச் சான்றிதழ் பெற மாணவர்களை வற்புறுத்தக் கூடாது" என்றார்.

இது தொடர்பான சுற்றறிக்கையும் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close