மாவட்ட நுாலகங்களில் ஐ.ஏ.எஸ் பயிற்சி - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

  Newstm Desk   | Last Modified : 09 Jun, 2018 08:00 am

ias-coaching-will-be-implemented-in-all-district-libraries-says-minister-sengottaiyan

'மாவட்ட நுாலகங்களில் இன்னும் ஒரு மாதத்திற்குள் ஐ.ஏ.எஸ் பயிற்சி அகாடமி துவக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்  செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மே 29ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய கூட்டத்தொடரில், கேள்வி நேரத்தின் போது, தருமபுரி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அவரது மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் நூலகம் கட்டுவது குறித்து கேள்வி எழுப்பினார். அதேபோன்று திருவெறும்பூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ, 'பல்வேறு இடங்களில் நூலகங்கள் சரியாக பராமரிக்கப்படுவதில்லை. மழையினால் புத்தகங்கள் நனைந்து விடுகின்றன. புத்தகங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார். 

இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், "தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் நூலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. புதிய நூலகங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் புதிய நூலகங்கள் திறக்கப்படும். மேலும், நூலகங்கள் பராமரிப்பு குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படும். புத்தகங்கள் பாதுகாக்கப்படும். அனைத்து வகையான புத்தங்கங்களும் நூலகங்களில் கிடைக்க வழிவகை செய்யப்படும். முக்கிய அறிவிப்பாக இன்னும் ஒரு மாதத்திற்குள் அனைத்து மாவட்ட நூலகங்களிலும் ஐ.ஏ.எஸ் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இதன் மூலம் மாணவர்கள் மிகவும் பயன்பெறுவர்" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close