பிளஸ் 1, பிளஸ் 2 மொழிப்பாட தேர்வு மாற்றம்; அரசாணை வெளியீடு

  Newstm Desk   | Last Modified : 11 Jun, 2018 02:11 pm

plus-1-plus-2-question-paper-changed-official-notification-released

பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகளில் மொழிப்பாடத்தை ஒரே தேர்வாக நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மேல்நிலை வகுப்புகளான 11 மற்றும் 12ம் வகுப்புகளில் மொழிப்பாடம், முதல் தாள், இரண்டாம் தாள் என இரண்டு தேர்வுகளாக நடத்தப்படுகிறது. இவற்றை மாற்றி ஒரே தேர்வாக நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி, இன்று தமிழக அரசு அதற்கு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் இனிமேல் மொழிப்பாடம் ஒரே தேர்வாக நடத்தப்படும் என்பது உறுதியாகியுள்ளது. வரும் கல்வியாண்டு முதலே இந்த நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close