• தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் பிரபல வணிக வளாகம் மூடல்
  • காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
  • பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு தலையிடாது - அமைச்சர் தர்மேந்திர பிரதான்
  • சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!
  • ஒரு மணி நேரம் முடங்கிய யூ டியூப் இணையதளம்!

5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! - சென்னை வானிலை ஆய்வு மையம்

  Newstm Desk   | Last Modified : 12 Jun, 2018 01:05 pm

heavy-rainfall-may-be-happened-in-5-districts-says-cmc

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து, கோவை, நீலகிரி,தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் இன்றைய வானிலை நிலவரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், "தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால் கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும்.இப்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எச்சரிக்கை தேவை. இந்த மாவட்டங்களைத் தவிர வெப்பசலனத்தால் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான அளவு மழை பெய்யும். சென்னையில் தரைக்காற்று பலமாக வீசும் மற்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக 37 டிகிரியும், குறைந்தபட்சம் 29 டிகிரியும் வெப்பநிலை பதிவாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார் மற்றும் வால்பாறையில் தலா 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் பெரியார், நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் தேவாலாவில் தலா 9 செ.மீ மழையும் , செங்கோட்டையில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது" என்றார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close