18 எம்.எல்.ஏக்கள் வழக்கு... பதினெண்கீழ்கணக்கு எடப்பாடி சூசக அழைப்பு

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 14 Jun, 2018 11:52 am
18-mlas-case-call-for-edappadi

டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏக்களின் வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.  இந்த நிலையில் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் 18 எம்.எல்.ஏக்கள் குறித்து ஒரு கவிதை வெளியிட்டுள்ளது. 

அரசியல் கருத்துக்களை நையாண்டியோடு எடுத்து சொல்லும், சித்ரகுப்தன் என்ற பெயரில் எழுதப்படும் பத்தியில் இந்த கவிதை இடம் பெற்றுள்ளது.

பதினெண் கீழ்க் கணக்கு... என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள அந்த கவிதையில், சேராத இடம் சேர்ந்து 18 பேர் வீழ்ந்ததாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டாலும் இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரகள் உடனே சுப்ரீம் கோர்ட் சென்றால் இதே நிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரம் சிவக்கக் கொடுத்துச் சிறந்த கர்ணனும், களத்தே மாண்டான் எனில் துஷ்ட துரியோதனக் கும்பலோடு கூடாத இடம் தன்னில் கூடியதால்தான். சகுனியை சார்ந்தோர் அழிந்ததும். சாரதியாம் கண்ணனைச் சார்ந்தோர் வாழ்ந்ததும்... அவனை நம்பிய அவல் குசேலனும் அதி குபேரன் ஆனதும்.. குலம் பார்த்து கூடியதால் மட்டுமே!

திருமாலை வணங்கியதால் முடி துறந்த மன்னனும் குலசேகர ஆழ்வாராய் குடி உயர்ந்தது போல நல்லோரை கும்பிட்ட கரங்களுக்கு மட்டும்தான் அது பிரியுமுன்னே நன்மைகள் குவிகிறது! இவ்வாறு நீண்டு செல்கிறது அந்த கவிதை.

இதன் மூலம், தினகரன் தரப்பை துரியோதனர் கூட்டத்தோடு ஒப்பிட்டு, எடப்பாடி பழனிச்சாமி தரப்பை பஞ்ச பாண்டவர்கள் தரப்புடன் ஒப்பிட்டுள்ளது இந்த கவிதை. இதன் மூலம், சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தால் பிரச்னை இருக்காது என்று மறைமுகமாக 18 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஒருவேளை இந்த வழக்கில் தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பு வந்தால் 18 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றம் சென்று முறையிடும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு முறையிட்டால் தற்போதைய நிலையே தொடரும் வாய்ப்பு உள்ளது. ஆனால், எம்.எல்.ஏ-க்கள் 18 பேரும் மேல் முறையீடு செய்ய மாட்டோம் என்று கூறி எடப்பாடி பழனிசாமிக்கு அதிரடி காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
t1
Advertisement:
[X] Close