18 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்... புகார் மனு முதல் தீர்ப்பு வரை!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 14 Jun, 2018 03:26 pm

18-mlas-will-be-disqualified-case-file-to-judgement

18 எம்எல்ஏக்கள் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியான தீர்ப்பில் நீதிபதி சுந்தர்  தகுதி நீக்கம் செல்லாது என்றும் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் என்றும் மாறுபட்ட  தீர்ப்பை அளித்தனர் இதனால் வழக்கு 3வது நீதிபதிக்கு மற்றப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் இந்த வழக்கு கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்ப்போம்..

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக சில நாட்கள் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் சசிகலா முதல்வராக வேண்டும் என அதிமுக கட்சிக்குள் குரல்கள் ஒலித்ததால்  2017ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி அதிமுகவின் சட்டப்பேரவை தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதற்கு அடுத்த 2 நாட்களில் அதாவது பிப்ரவரி 7ம் தேதியன்று தன்னை கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்ததாக சசிகலா குடும்பத்தார் மீது புகார் தெரிவித்தார் தற்போதைய துணை முதல்வராக பதவி வகித்து வரும் ஓ.பன்னீர்செல்வம்.

இதனை அடுத்து அதிமுக இரு அணிகளாக உடைந்தது. சசிகலா அணி மற்றும் பன்னீர் செல்வம் அணியாக பிரிந்தது.

பிப்ரவரி 14ம் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவிற்கு சிறை தண்டனை வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.  தீர்ப்பு வழங்கப்பட்ட மறு நாளே டிடிவி.தினகரன் அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். சசிகலா சிறைதண்டனை பெற்றதை அடுத்து 2017ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதியன்று முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்று கொண்டார். 

2017ம் ஆண்டு ஏப்ரல் 25ம் தேதியன்று இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் அளித்த புகாரில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் 2017 ஆகஸ்ட் 21ம் தேதியன்று ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்தன. 

 ஆகஸ்ட் 22 ம் தேதியன்று டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டனர். செப்டம்பர் 7ம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக, ஆளுநரை சந்தித்து  டிடிவி.தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கடிதம் அளித்தனர். 

செப்டம்பர் 18ம் தேதியன்று எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக மனு அளித்த 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

செப்டம்பர் 20 18-எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்துக்கு தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  செப்டம்பர் 24ம் தேதியன்று சட்டப்பேரவை இணையதளத்தில் 18 எம்எல்ஏக்களின் பெயர், விவரம் நீக்கப்பட்டது. 

கடந்த ஜனவரி 23ம் தேதி நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய முதல் அமர்வு  தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை தள்ளிவைத்தது. இந்நிலையில் கோடைவிடுமுறை முடிந்த உடன் தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில்,  இன்று ஜுலை 14ம் தேதி 18 எம்எல்ஏ க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால்,  நீதிபதி சுந்தர்  தகுதி நீக்கம் செல்லாது என்றும் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி தகுதி நீக்கம் செல்லும் என்றும் மாறுபட்ட  தீர்ப்பை அளித்தனர் இதனால் வழக்கு 3வது நீதிபதிக்கு மற்றப்பட்டுள்ளது. 

இதுகுறித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் ’’சபாநாயகரின் உத்தரவில் நீதிமன்றம் தலையிடக்கூடாது. சபாநாயகரின் முடிவு என்பது உரிய காரணங்களுடன் எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் உத்தரவை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட்படுத்தக்கூடாது.  18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கை விசாரிக்க 3வது நீதிபதி நியமிக்கப்படுவார்.  20.09.2017ல் நீதிபதி துரைசாமி வழங்கிய இடைக்கால உத்தரவு நீடிக்கும். தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் 3வது நீதிபதி யார் என்பதை நீதிபதி குவாடி ரமேஷ் அறிவிப்பார்’’ என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close