கொல்லிமலை அருகே நரபலி கொடுக்கப்பட்ட சகோதரர்கள்? நடந்தது என்ன?

  ஐஸ்வர்யா   | Last Modified : 07 Jul, 2018 04:58 pm

farmers-murder-in-kollimalai

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே கொடுவாளால் வெட்டப்பட்ட நிலையில் சகோதரர்களின் உடல்கள் இடுகாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதால் அவர்கள் நரபலி கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

நரபலி கொடுக்கப்பட்ட சகோதரர்கள்!

கொல்லிமலை அருகே ஆலவாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் முத்துச்சாமி மற்றும் ஸ்ரீரங்கன். முத்துசாமிக்கு மனைவி, குழந்தைகள் எதுவும் இல்லை. ஸ்ரீரங்கனுக்கு ராஜம்மாள் என்ற மனைவி உள்ளார். சகோதரர்கள் இருவரையும் ஆலவாடிபட்டி சுடுகாடு அருகே காவல்துறையினர் சடலமாக கண்டெடுத்துள்ளனர். இவர்களுக்கும் அதே ஊரைச் சேர்ந்த மற்றொருவருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆலவாடிப்பட்டி இடுகாட்டில் தலை மற்றும் கழுத்து ஆகிய இடங்களில் கொடுவாளால் வெட்டப்பட்ட நிலையில் இருவரின் உடல்களும் கிடந்துள்ளன. அவர்கள் உடலுக்கு அருகே வாழை இலையில் கோழி முட்டை, மதுபானம், விபூதி, குங்கும மற்றும் பூஜைப் பொருட்கள் ஆகியவை கிடந்தன.

இதன் காரணமாக சகோதரர்கள் இருவரும் நரபலி கொடுக்கப்பட்டார்களா? அல்லது நிலத்தகராறில் கொலை செய்யப்பட்டார்களா? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து இரண்டு பேரின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நடந்தது என்ன?

விவசாயம் செய்துவரும் முத்துச்சாமி மற்றும் ஸ்ரீரங்கன் வீட்டுக்கு அடிக்கடி சாமியார் ஒருவர் வந்து செல்வது வழக்கம். அதேபோல் கொலை நடந்த நாளுக்கு முந்தைய நாளும் அந்த சாமியார் முத்துசாமியிடம், உனக்கும் உன் தம்பிக்கும் யாரோ செய்வினை வைத்துள்ளனர். பில்லி, சூனியத்தால் உங்கள் வீடு மற்றும் வயல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் எவ்வளவு உழைத்தாலும் முன்னேற்றமே இருக்காது இதற்கு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இந்த பூஜையை நள்ளிரவில் சுடுகாட்டில் செய்தால் பில்லி, சூனியம் அகன்று வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் கூறியுள்ளார்.

சாமியாரின் பேச்சை நம்பிய முத்துச்சாமி மற்றும் ஸ்ரீரங்கன், அவர் கூறிய பூஜை பொருட்களை வாங்கிக்கொண்டு சுடுகாட்டிற்கு சென்றுள்ளனர். இரவில் சாமியார் ஸ்ரீ ரங்கன் மற்றும் முத்துச்சாமியை நரபலி கொடுத்தாரா? அல்லது முத்துச்சாமி மற்றும் ஸ்ரீரங்கனின் நிலத்திற்கு ஆசைப்பட்டு அவரை யாரெனும் கொலை செய்தனரா? என்பதை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close