ஜெ.வின் கட்டளையே சாசனம்- ஓபிஎஸ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 09 Jul, 2018 09:26 pm

o-panneerselvam-said-the-dialogue-of-the-bahubali-movie-at-tnassembly

தமிழக சட்டப்பேரவையில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், "ஜெயலலிதாவின் கட்டளையே சாசனம்" என்று பாகுபலி படத்தில் வரும் வசனத்தைச் சொல்லி தனது  உரையை முடித்தது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்றம், தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு சட்டமுன்வடிவு, தமிழ்நாடு வேளாண் விளைப்பொருளை சந்தைப்படுத்துதல் திருத்த சட்டமுன்வடிவு ஆகியவை தாக்கல் தாக்கல் செய்யப்பட்டது. 

லோக் ஆயுத்தா மசோதா நிறைவேற்றத்துக்கு பின் பேரவையில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், சேலம் 8 வழிச்சலை திட்டத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. விவசாயிகள் தாமகவே முன்வந்து நிலங்களை கொடுத்து உதவுகின்றனர். ஜெயலலிதா வழிநடத்திய கட்சி அதிமுக, நமக்கு துரோகம் செய்தவர்களை, நாமே சூரசம்காரம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெயலலிதா கூறியதுபோல் எதிரிகளை அழிக்க வேண்டும். நமக்கு துரோகம் செய்தவர்களை, நாமே சூரசம்காரம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஜெ.வின் கட்டளையே சாசனம் என பாகுபலி வசனத்தை சத்தமாக கூறினார்.

இதையடுத்து தேனி மாவட்டத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெற்றோருடன் தினந்தினம் போராடும் சிறுமி அனிதாவின் கல்விச் செலவை அரசே ஏற்கும் என்றும் அவர்களுக்கு வீடு, மாதம் ரூ.3000 உதவித் தொகை வழங்கப்படும் என்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் பேரவையில் அறிவித்தார்.

newstm.in


 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close