டேங்கர் லாரி உரிமையாளர்கள் 2வது நாளாக  போராட்டம்!

  சுஜாதா   | Last Modified : 10 Jul, 2018 08:04 am

tanker-lorry-strike

டேங்கர் லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சுங்கச்சாவடி கட்டணம், உதிரி பாகங்கள் விலை உயர்வு ஆகியவற்றால் டேங்கர் லாரி உரிமையாளர்கள், ஒப்பந்த நிறுவனங்களிடம் லாரி வாடகையை உயர்த்தி தர கோரினர். ஆனால் இது குறித்து ஒப்பந்த நிறுவனங்கள் எந்த வித உத்தரவாதமும் கொடுக்கவில்லை. இதனை தொடர்ந்து  வருகிற 20-ந் தேதி முதல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து இருந்தனர்.

இந்நிலையில், திடீரென்று நேற்று காலை முதல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் மற்றும் லாரி ஓட்டுநர்கள், லாரி வாடகையை உயர்த்தி தர கோரி  வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இந்த போராட்டம்  2வது நாளாக இன்றும் தொடர்கிறது. இதனை அடுத்து எண்ணெய் நிறுவனங்களுக்கு பெட்ரோல், டீசல் ஆகியவற்றை கொண்டு செல்லும் லாரிகள் இயங்கவில்லை.  இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது.
 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close