தூத்துக்குடி வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக்கூடாது: உயர்நீதிமன்றம் கேள்வி

  Newstm News Desk   | Last Modified : 10 Jul, 2018 09:00 am

hc-questions-about-giving-thoothukudi-case-to-cbi

தூத்துக்குடி தூப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் தமிழக அரசு ஏன் தயக்கம் காட்டுகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் 13 பேர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதையடுத்து துப்பாக்கிச் சூட்டில் 13 பேர்  உயிரிழந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, பி.டி. ஆஷா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அதில்,  குட்கா வழக்கில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்ததால் சிபிஐ  விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதேபோல தூத்துக்குடி வழக்கையும் சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தயக்கம் என கேள்வி  எழுப்பப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் என யாருக்கு தொடர்பு இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பான அனைத்து ஆவணங்களை வரும் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close