ஜூலை 14ல் வேலூர், கடலூரில் சிறப்பு பாஸ்போர்ட் முகாம்

  Newstm Desk   | Last Modified : 10 Jul, 2018 02:24 pm

special-passport-camp-in-vellore-and-cuddalore

வேலூர், கடலூர் மாவட்ட மக்களின் வசதிக்காக வருகிற 14ம் தேதி சிறப்பு பாஸ்போர்ட் முகாம் நடைபெற உள்ளதாக சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பொது மக்களின் வசதிக்காக சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், வருகிற 14-ம் தேதி வேலூர் மற்றும் கடலூரில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களில் சிறப்பு பாஸ்போர்ட் முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பாஸ்போர்ட் முகாமில் பங்கேற்க விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும், ‘www.passportindia.gov.in’,  என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆன்லைன் முறையில் பதிவு செய்து, விண்ணப்ப பதிவு எண் பெறுவதுடன், இணையதளம் மூலமாகவே கட்டணத்தையும் செலுத்தி, நேர்காணலுக்கு நேர ஒதுக்கீடு பெறலாம். இந்த முகாமில் பங்கேற்கும் விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்ப பதிவு எண்ணைக் கொண்ட நகலுடன், தேவையான அசல் சான்றிதழ்கள் மற்றும் சுய சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் பிரதி ஒன்றையும் அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்திற்கு எடுத்து வர வேண்டும். புதிய மற்றும் மறு பாஸ்போர்ட் கோரும் விண்ணப்பங்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்படும்.

முகாமில் பங்கேற்பதற்கான நேர ஒதுக்கீடு பற்றிய விவரங்கள், 11ம் தேதி (புதன்கிழமை) 2.30 மணிக்கு வெளியிடப்படும். முகாம் நாளன்று அவரவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படும். காவல்துறை தடையின்மைச் சான்று, நிறுத்தி வைக்கப்பட்ட மற்றும் மறுக்கப்பட்ட டோக்கன்களுக்கான விண்ணப்பங்கள் இந்த முகாமின் போது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

newstm.in

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close