அதிமுகவினர் கம்பி எண்ணும் நேரம் நெருங்கிவிட்டது- ஈவிகேஎஸ்

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Jul, 2018 07:21 pm

aiadmk-party-members-will-go-to-jail-soon-says-evks-elangovan

அதிமுகவினர் கம்பி எண்ணும் நேரம் நெருங்கிவிட்டது என முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டதாக கூறும் அமித்ஷா, அவர் மகன் கடந்த 4 ஆண்டுகளில் எப்படி 1000 கோடி சம்பாதித்தார் என்று விளக்கமளிக்க வேண்டும். தமிழகத்தில் ஊழல் அதிகரித்தது உண்மையென்றால்,  ஓபிஸ், ஈபிஸ் தலைமையிலான அதிமுக ஆட்சியை மத்திய அரசு கலைக்காதது ஏன்? முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உயிருடன் இல்லாத காரணத்தால் அமைச்சர் ஜெயகுமார், இஷ்டம் போல் பேசி வருகிறார். தொடர்ந்து  காங்கிரஸ் பற்றி விமர்சிப்பதை பார்க்கும் போது விரைவில் இவர்கள் கம்பி எண்ணும் நேரம் நெருங்கி வருவதை காட்டுகிறது” என கூறினார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close