தி.மு.க-வுக்கு பயம் வரத்தானே செய்யும்? - பொன். ராதா சூசகம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 10 Jul, 2018 11:22 pm

pon-radha-krishnan-tweet

விளக்கின் ஒளி வரும்போது இருள் பயப்படத்தான் செய்யும் என மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

2019 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளதால் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பாஜவின் நிலை என்ன என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா நேற்று வந்தார். அப்போது ஈஞ்சம்பாக்கத்தில் நிர்வாகிகளுடன் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமித்ஷா, பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஊழலை ஒழித்துவிட்டோம்.

தமிழகத்தில்தான் ஊழல் அதிகமாக உள்ளது. ஓட்டுக்கு நோட்டுகொடுத்து ஊழல் செய்யும் நிலையை மீட்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிப்போம் எனக் கூறினார். மேலும் தமிழகத்திற்கு மத்திய அரசு அளித்த சிறப்பான திட்டங்களையும், வழங்கிய நிதியையும் பட்டியலிட்டார். தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளதாக அமித்ஷா பேசியதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், "விளக்கின் ஒளி வரும்போது இருள் பயப்படத்தான் செய்யும்.. அமித் ஷா என்னும் ஒளி வடிவில் தர்மத்தின் ஆட்சி தமிழகத்தில் வருவதை இருண்ட ஆட்சியை தந்த தி.மு.க எதிர்க்கத்தான் செய்யும்... தமிழ்நாட்டில் இனி இருண்ட ஆட்சிக்கு இடமே இல்லை" என பதிவிட்டுள்ளார். 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close