தி.மு.க-வுடன் அண்டர்கிரவுண்ட் கூட்டு... ராஜூ மகாலிங்கத்துக்கு கல்தாவா? - பாட்ஷாவாக மாறும் ரஜினி!

  ஆர்.எம்.திரவியராஜ்   | Last Modified : 11 Jul, 2018 08:30 pm

dmk-behind-rajini-makkal-mandram-rajini-to-become-bhatcha

சென்னை திரும்பியுள்ள ரஜினி தனது மக்கள் மன்ற முக்கிய நிர்வாகிகளுக்கு கல்தா கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. 

யாரை முழுமையாக நம்பினாரோ அவர்களே ரஜினிக்கு குழிபறிக்கும் திட்டங்களில் ஈடுபட்டது அவரை வெகுவாக அப்செட் ஆக்கி விட்டதாக கூறுகிறார்கள் ரஜினி மன்ற நிர்வாகிகள். இதுகுறித்து பேசிய அவர்கள், ‘தலைவருக்கு இப்போதுதான் எல்லாம் தெரிய வந்திருக்கிறது. மன்ற நிர்வாகிகள் வசூலில் ஈடுபட்டது, தனக்கென கோஷ்டிகளை உருவாக்கி வருவது என அனைத்து விவரங்களையும் அறிந்து கொண்டுள்ளார். கட்சியை அறிவிப்பதற்கு முன்பே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட நிர்வாகிகளை மொத்தமாக ஓரங்கட்டும் முடிவுக்கு வந்துவிட்டார்.

குறிப்பாக லைக்கா நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ராஜூ மகாலிங்கத்தின் செயால்பாடுகள் திருப்திகரமாக இருந்ததால் அவரை அழைத்து மன்றத்தின் தலைமை கழக பொறுப்பாளர் பதவியை கொடுத்திருந்தார். அடுத்து தனது நண்பரான சுதாகரையும் முழுமையாக அவர் நம்பினார். ஆகையால் இருவரையும் சமமான இடத்தில் வைத்து பொறுப்பு கொடுத்திருந்தார். 

இப்போது நடக்கும் சம்பவங்களால் யாரை நம்புவது? எனக்குழப்பத்தில் இருக்கிறார். ஆகையால், மேல்மட்ட நிர்வாகிகளை பற்றிய தகவல்களை அறிய ரகசிய குழு ஒன்றை அமைத்து அவர்களின் பின்புலம் பற்றிய தகவல்களை திரட்டியிருக்கிறார். அதில், ராஜு மகாலிங்கம், தி.மு.க-வின்  நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டி.ஆர்.பாலுவின் மகனும் தி.மு.க எம்.எல்.ஏ-வுமான டி.ஆர்.பி.ராஜாவின் நெருங்கிய நண்பராக இருப்பது தெரிய வந்துள்ளது.

தொடக்கத்தில் டி.ஆர்.பாலு குடும்பம் நடத்தி வந்த கப்பல் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்புகளை ராஜூ மகாலிங்கம் நிர்வகித்து வந்துள்ளார். இப்போதும் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடனும் ராஜூ மகாலிங்கம் பழக்கத்தில் இருந்து வருவதும் தெரிய வந்துள்ளது. ரஜினி மன்றத்தில் நடக்கும் ரகசிய விவரங்கள்கூட தி.மு.க வட்டாரத்துக்குப் போவதாக சில ஆதாரங்கள் தலைவருக்கு கிடைத்துள்ளன. அதனால்தான், ராகவேந்திரா மண்டபத்தில் உள்ள அலுவலகத்தை ரஜினி உடனடியாக மூடச்சொல்லி உத்தரவிட்டு இருக்கிறார். எனவே ராஜூ மகாலிங்கம் மன்றத்தில் இருந்து அதிரடியாக களையெடுக்கப்படலாம்’’ என்கிறார்கள்.

மன்றத்தின் முக்கிய  நிர்வாகிகளால் அதிருப்தியில் இருந்தவர்கள் ரஜினியின் கட்டளையால் முடங்கிக் கிடக்க, அவர்களால் அதிருப்தியில் இருந்தவர்கள் இப்போது சுறுசுறுப்பாக மன்றப்பணிகளை தொடர்ந்து வருகிறார்கள்’’ என்கிறது மற்றொரு தரப்பு. 

இனியாவது அரசியல் களத்தில் ரஜினி பாபாவாக இல்லாமல் பாட்ஷாவாக மாற வேண்டும் என்கிறார்கள் அவரது அரசியல் விரும்பிகள்..!

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close