11-07-2018 நியூஸ்டிஎம் டாப் 10 செய்திகள்!

  முத்துமாரி   | Last Modified : 11 Jul, 2018 05:15 pm

11-07-2018-newstm-top-10-news

தமிழக அரசுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை!

தமிழகத்தில் நிலக்கரி இறக்குமதி செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் நல்லதுக்குத் தானே கூறினேன் - அன்புமணி விளக்கம்!

நடிகர் விஜய் புற்று நோயால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அவரை புகை பிடிக்க வேண்டாம் என்று கூறியதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், சிம்புவின் சவாலுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் கூறினார்.

தமிழகத்தில் 'அம்மா உணவகம்' போல ஆந்திராவில் 'அண்ணா கேன்டீன்'

தமிழகத்தில் அம்மா உணவகம் போன்று ஆந்திராவில் 'அண்ணா கேன்டீன்' என்ற திட்டத்தை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைத்தார். ஆந்திராவில் இன்று மட்டும் 25 நகராட்சிகளில் 60 கேன்டீன்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், மாநிலம் முழுவதும் 110 நகராட்சிகளில் மொத்தமாக 203 கேன்டீன்கள் திறக்கப்பட உள்ளன. இதில் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளுக்கும் தலா ரூ.5க்கு உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜியோ பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை: மத்திய அரசு விளக்கம்!

இன்னும் தொடங்கப்படாத ரிலையன்ஸ் குழும அறக்கட்டளையின் ஜியோ பல்கலைக் கழகத்துக்கு மத்திய அரசின் சிறப்பு அந்தஸ்து (இன்ஸ்டிடியூட் ஆஃப் எமினென்ஸ்) வழங்கப்பட்டுள்ள விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில், ஜியோ பல்கலை.க்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் நோக்கம் மட்டுமே உள்ளது. தற்போது சிறப்பு அந்தஸ்து வழங்கப்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ராஜ்யசபாவில் 22 மொழிகளிலும் பேசலாம்! 

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது, மாநிலங்களவையில் எம்.பிக்கள் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலும் பேசலாம் என மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். இதுவரை ராஜ்யசபா எம்.பிக்கள் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 17 மொழிகளில் பேச அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

பேரறிவாளன் விடுதலையில் ஆட்சேபணை இல்லை: ராகுல் கூறியதாக ரஞ்சித் தகவல்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் விடுதலையாவதில் எந்த ஆட்சேபணைமும் இல்லை என ராகுல் தெரிவித்ததாக பா.ரஞ்சித் கூறியுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேற்று இயக்குநர் பா.ரஞ்சித் சந்தித்துள்ளார்.

ரியல் மாட்ரிட்டை விட்டு ஜூவென்டஸ் சென்றார் ரொனால்டோ!

பிரபல ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, ஜூவென்டஸ் அணியில் சேரும் ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது. சுமார் 100 மில்லியன் பவுண்ட் கொடுத்து ரொனால்டோவை ஜூவென்டஸ் வாங்கியுள்ளதாக ரியல் மாட்ரிட் உறுதி செய்துள்ளது.

தியானத்தின் மூலம் சிறுவர்களை காத்த பவுத்த துறவி!

தாய்லாந்தில் உள்ள லாம் துவாங் குகைக்குள் கடந்த 2 வாரங்களாக சிக்கித் தவித்த 12 சிறுவர்களை உணவின்றி தியானத்தின் மூலம் பசித்துறக்க வழி செய்திருக்கிறார் சிறுவர்களுடன் சென்ற பயிற்சியாளர். 

இன்று தொடங்குகிறது டிஎன்பிஎல்!

திருநெல்வேலியில் உள்ள சங்கர் நகர் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 7.15 மணிக்கு நடைபெற உள்ளது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் கேப்டனாக இந்திய அணி நட்சத்திரம் அஸ்வின் களமிறங்க இருப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விவேகத்தை கலாய்க்கும் தமிழ்படம் 2

சி.எஸ். அமுதம் இயக்கத்தில் உருவாகி உள்ள தமிழ்படம் 2 படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தில் மிர்ச்சி சிவா, ஐஸ்வர்யா, சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.  ரஜினி, விஜய் என அனைவரையும் கலாய்த்த இந்த குழு அஜித்தை மட்டும் ஏன் விட்டுவைக்கனும் என நேற்று ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அஜித்தின் விவேகம் படத்தை கலாய்க்கும் விதத்தில் வெளியான இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது. 

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close