போக்குவரத்து நெரிசலிலும் மழையால் மகிழ்ந்த சென்னை!

  திஷா   | Last Modified : 11 Jul, 2018 08:14 pm

raining-at-chennai

சென்னையில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. 

வெயில் குறைந்து சென்னையில் கடந்த சில தினங்களாக மந்தமான வானிலை நிலவி வந்தது. இன்று மாலை சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. 

தியாகராயர் நகர், அசோக் நகர், சைதாப்பேட்டை, அண்ணாநகர், ராமாபுரம், வளசரவாக்கம், வடபழனி, நுங்கம்பாக்கம், போரூர், ஈக்காட்டுத்தாங்கல், அடையாறு, எம்.ஆர்.சி நகர், தாம்பரம், ஓ.எம்.ஆர் உள்ளிட்ட இடங்களில் பெய்துவரும் கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை மட்டுமின்றி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், பொன்னேரி, மதுராந்தகம், ஆம்பூர் என சுற்றுவட்டார மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

இதனால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் ஒதுக்கி நிற்கின்றனர். வாகன ஓட்டிகள் மேடான பகுதியாகப் பார்த்து வண்டியை செலுத்தி வருகின்றனர். இதனால், சென்னை முழுக்க போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், வாகன ஓட்டிகள் மட்டும் கொஞ்சம் புலம்பியபடி வண்டி ஓட்டி வருகின்றனர்.

இதற்கிடையே, வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில்  மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close