மிரட்டும் கிரகணம்! கர்ப்பிணிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா?

  சாரா   | Last Modified : 10 Jan, 2020 04:02 pm
lunar-eclipse-rules-for-ladies

இன்று இரவு 10.37 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம், நாளை அதிகாலை 2.42 மணி வரையில், சுமார் 4 மணி நேரம் தொடர்ந்து நீடிக்கும் என்றும், நள்ளிரவு 12.41 மணியளவில் சந்திர கிரகணம் அதன் முழுமையான அளவை எட்டும் என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். 

சந்திரகிரகணத்தின்போது கர்ப்பிணிகள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது, வேலை செய்யக்கூடாது, சந்திரனை பார்க்கக்கூடாது என பெரியவர்கள் கட்டளையிட்டுள்ளனர். இது உண்மை தானா? அப்படி வேலை செய்தால் என்னவாகும். கிரகண மூலி ஏற்படுமாம்.

கிரகண மூலி என்றால் என்ன?

சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ நடக்கும் போது கதிர்வீச்சு பாதிப்புகள் அதிகம் இருக்கும். இதனால் கர்ப்பிணிகள் வெளியில் வரக்கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கிரகணம் முடியும்வரை உணவு சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல், வீட்டில் சமையல் செய்யாமலும் இருக்க வேண்டுமாம். பொதுவாக கர்ப்பிணிகள் நகம் வெட்டக்கூடாது, காய்கறி நறுக்ககூடாது என கூறுவர். அப்படி செய்தால் வெட்டுக்காயங்களுடனும், உதடுகள் பிளவுடன் குழந்தை பிறக்கும் எனக்கூறப்படுகிறது இதை தான் ’கிரகண மூலி’ என்கின்றனர்.

இவ்வளவு ஏன் பாயில் படுத்தால் கூட  பாயின் வெட்டுகள் கர்ப்பிணியின் உடலில் பட்டால் குழந்தைக்கு வெட்டு காயங்கள் ஏற்படுமாம். கர்ப்பிணி பெண்கள் வெளியே வந்தால் கதிர்வீச்சு பாதிப்பினால் ஊனமாக குழந்தை பிறக்கும் என பெரியவர்கள் கூறுகின்றனர். இதேபோல் கிரகண நேரத்தில் கர்ப்பம் தரிக்க கூடாது என்றும், உடலுறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் கூறப்படுகிறது. இதற்கான ஜோதிட கருத்துப்படி கிரகண நேரத்தில் பிறப்பவர்களின் ஜாதகத்தில் சூரியன்- சந்திரன், சாயா கிரகங்களான ராகு- கேதுவுடன் இணைந்திருக்கும் இதனால் வாழ்வில் சில பிரச்னைகளை எதிர்க்கொள்ளக்கூடும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

கர்ப்பிணிகளுக்கு மட்டுமல்லாமல் கிரகண பாதிப்பு பூமியில் வாழும் தாவரங்கள், விலங்குகள், நோயாளிகளுக்கும் கதிர்வீச்சு விரைவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதற்கு அறிவியல் பூர்வமான ஆய்வு முடிவுகள் இல்லை. என்றாலும், கிரகணத்தால் பிரச்னை ஏதும் இல்லை என்றால் சந்தோஷமே... ஒருவேளை பிரச்னை இருந்து அது நம்முடைய குழந்தையிடம் தாக்கத்தை ஏற்படுத்தினால் என்ன செய்வது. வாழ்நாள் முழுவதும் அது நம்மை வேதனையில் ஆழ்த்திவிடுமே. அதனால், நம் முன்னோர் சென்ன விஷயத்தை கேட்டு ஒரு நாளாவது நடந்துகொள்வோம்! 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close