காவேரி மருத்துவ அறிக்கையை பார்த்தீர்களா? - பரவும் புது வதந்தி!

  Newstm Desk   | Last Modified : 01 Aug, 2018 04:01 pm
kauvery-s-medical-report-about-karunanidhi-is-suspected

தி.மு.க தலைவர் பற்றி ஏராளமான வதந்திகள் வருவது வாடிக்கைதான். அதிலும், காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரைப் பற்றி ஏராளமான வதந்திகள் வந்தவண்ணம் உள்ளன.

வதந்திகளை தடுக்க புகைப்படம், மருத்துவ அறிக்கை வெளியிடப்படுகிறது. ஆனால், அதை வைத்தே புதிய புதிய வதந்திகள் கிளப்பப்படுகின்றன. அந்த வகையில், காவேரி மருத்துவமனையின் அறிக்கையை வைத்து கருணாநிதியின் உடல்நிலைப் பற்றி புதிய தகவல் வந்துள்ளது. மருத்துவ அறிக்கையை வைத்து பார்க்கையில் இதை மறுப்பதற்கும் வாய்ப்பு இல்லை என்றே மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

செவ்வாய்கிழமை வெளியான மருத்துவ அறிக்கையில், சில தினங்களுக்கு முன்பு கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான். ஆனால், அதில் இருந்து மீண்டுவந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து குறிப்பிடப்பட்ட தகவல்தான் பகீரென உள்ளது.

மருத்துவ அறிக்கையின் கடைசி பத்தியில், வயது முதுமை தொடர்பாக ஏற்பட்டிருக்கும் சில உடல் நலப் பிரச்னைகளுக்கு அவர் மேலும் சில நாள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதில் அவருக்கு கல்லீரல் செயல்பாடு மற்றும் ரத்தம் தொடர்பான (haematological) என்று குறிப்பிட்டிருப்பது கருணாநிதியின் உடல்நிலை இன்னும் சீராகவில்லை என்பதையே காட்டுகிறது.

நம்முடைய உடலின் மிகப்பெரிய ரசாயனத் தொழிற்சாலை என்று கல்லீரலைச் சொல்வார்கள். 70- 80 சதவிகிதம் அதன் செயல்பாடு பாதிக்கப்படும்போதுதான் பிரச்னையையே வெளிப்படுத்தும். உணவு செரிமானத்தில் இருந்து, நச்சுக்களை வெளியேற்றுவது வரை அதன் பயன் ஏராளம். அதில் பிரச்னை ஏற்பட்டது என்றால் அதை சாதாரண குறைபாடாக கருத முடியாது. மேலும் வெறும் ரத்த அழுத்த பிரச்னை என்று குறிப்பிடாமல்  haematological என்று குறிப்பிட்டிருப்பது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.  ஹேமட்டாலஜி என்றால் ரத்தம் சார்ந்த நோய்கள் அதாவது ரத்த சிவப்பணு, வெள்ளையணு, தட்டணு எண்ணிக்கை, உற்பத்தி, அதில் ஏற்படும் பிரச்னைகளை பற்றி குறிக்கிறது. 

இதை வைத்து பிரச்னை ஒரு சில நாட்களுக்கு மட்டுமே தள்ளிப்போடப்பட்டுள்ளது என்று குண்டைத் தூக்கிப்போடுகின்றனர். வதந்திகள் வதந்தியாகவே இருந்துவிட்டால் நல்லது என்பதே நம்முடைய நிலைப்பாடும். அவர் விரைவில் குணம் பெற்று அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து வீடு திரும்ப பிரார்த்திப்போம்!

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close