ஆக.20 இல் அதிமுக செயற்குழு கூடுகிறது

  ஐஸ்வர்யா   | Last Modified : 13 Aug, 2018 07:23 pm
admk-meeting-held-on-august-13th

சென்னையில் ஆக.20 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் 

அதிமுகவின் அறிக்கையில், சென்னையில் ஆக.20 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் செயற்குழுக்கூட்டம் மாலை 4 மணிக்கு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் கூட்டம் நடைபெறும். செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு கூட்டத்தில் பங்கேற்கவேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கருணாநிதி மறைவுக்குப் பின்னர் நாளை திமுக செயற்குழு அவசர கூட்டம்மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close